ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் இல்லை – சுஜீவ எச்சரிக்கை…

பிரதமருக்கு எதிரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்த பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் கட்­டாயம் செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் அர­சியல் ரீதி­யாக தீர்க்­க­மான முடி­வினை எடுக்க நேரிடும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   செயற்­குழு கூட்­டத்தில் பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ளனர்.

அத்­துடன் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கக் கூடாது என்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு­வ­ரையே வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இதன்­போது தானும் ஐக்­கிய தேசியக்  கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இவ்­வாறு கட்­சியின் தலை­வ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­த­தாக இரா­ஜாங்க அமைச்சர் சுஜிவ சேன­சிங்க ஊட­கங்­க­ளுக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.