வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோருக்கும் EPF…

வீட்டுப் பணியாளர்களாக தொழில்புரிவோரின் நலன் கருதி அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை (EPF) அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும், தொழில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) பொலன்னறுவை மாவட்டத்தில் தொழிலாளர் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.