எகிப்து நாட்டின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவு கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி 3 நாட்கள் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டதுடன் அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதுடன், முடிவில் தற்போதைய அதிபர் அப்துல் சிசி பதிவான வாக்குகளில் சுமார் 97 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன்மூலம் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 2022-ம் ஆண்டு வரை அவர் எகிப்து நாட்டின் ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.