ஆதரவாக வாக்களிக்க ரவி, பிரதமரிடம் கோரிய 02 பதவிகளும் இவைதான்…

பொருத்தமான அமைச்சுப் பதவியொன்றும், ஐக்கிய தேசியக் கட்சியில் பொருத்தமான தலைமைப் பதவியொன்றும் தருவதாக எழுதப்பட்டு உத்தியோகபூர்வமாக தனக்கு வாக்குறுதி ஒன்று தருவதாக இருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு வழங்காதவிடத்து, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்கினை பயன்படுத்துவதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதுகுறித்து இன்று(03) கலந்துரையாடி தீர்மானம் ஒன்றினை வழங்குவதாக பிரதமர் உடன்பட்டுள்ளதாகவும் குறித்த வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.