கோத்தாபய தேர்தலில் குதிக்க மாட்டாராம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ இத்தீர்மானம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இம்முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாவது;

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன.

எனினும் நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

ஆனால், எதிர்வரும் காலங்களில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு என்னை நான் முழுமையாக அர்ப்பணிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(riz)