நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணி அதிகாரத்தினை பெற்றிருந்த மாத்தளை – உகுவெலை பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஈ.டப்ளியூ.எம்.சேத்தியரத்ன தெரிவாகியுள்ளார்.
இன்று(03) காலை இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது, சேத்தியரத்ன மற்றும் பொதுஜன முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் சமந்த தர்மசேன ஆகியோர் வேட்பாளர்களாக முன்னின்ற நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வெற்றி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் எச்.நிசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Rishma