புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின், அக்குற்றத்தை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் பலூன்கள் ஒரு இலட்சம் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தற்போது பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 72819 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.