வசந்த மற்றும் பாலித பிரதமருக்கு ஆதரவு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்று(04) தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக, இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.