இன்று முதல் போக்குவரத்து மட்டு…

இன்று(05) மற்றும் நாளை(06) கம்பஹா – மிரிஸ்வத்த வீதி நிர்மாணப்பணி காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்டி வீதி பெலும்மஹர சந்தி தொடக்கம் ஒருதொட வீதி ஊடாக கம்பஹா நகருக்கும் கம்பஹா நகரில் இருந்து ஒருதொட வீதியுடாக பெலம்மஹரவிற்கு பயணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி வீதி யக்கல சந்தி தொடக்கம் கம்பஹா நகரிட்கும் கம்பஹா நகரில் இருந்து மீண்டும் யக்கல நகரிற்கு பயணிக்க முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.