துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பொலிசாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதியில் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.