2017 ஆம் ஆண்டில் மட்டும் 246 பொலிசார் உயிரிழப்பு…

2017 ஆண்டில் மட்டும் சீனாவில் 43 வயதுக்கு குறைவான பொலிசார் 246 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது 361 பொலிசார் மரணம் அடைந்தனர். அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் பொலிசார் பணி புரிகின்றனர்.
அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி பொலிசாரின் குடும்பங்களுக்கான ஓய்வூதியத் தொகை மற்றும் காப்புறுதி உயர்த்தப்படுகிரதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிசாரின் வேலைப்பளுவை குறைக்க அறிவியல்பூர்வ தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.