இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி ஒருவர் இந்த காவலரணில் இருந்து கட்டளைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேப்பாப்புலவு – புதுகுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றவர்களினால் இந்த காவலரண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கேப்பாப்புலவில் இருந்து புதுகுடியிருப்பு நோக்கி படையெடுத்த இலங்கை இராணுவத்தினரின் நகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகளின் மூன்று சிறப்பு படையணிகள் அந்தப் பகுதியில் எதிர்ப்பு தாக்குதல்களை தொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
####

