கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(07) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடுவளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர்கள், சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, கண்டிக்கு சென்றிருந்தபோது இந்த அனர்த்த்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.