2017ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு விண்ணப்பத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன்(07) முடிவடைய இருந்தது.
இந்நிலையில், பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
.