சுற்றுலா செல்லும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா பயணங்களின் போது நீர்நிலைகளில் நீராடும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.