நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் காணவில்லை…

கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(08) 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ரங்கல , உடுதும்பர , ரத்தொட மற்றும் லக்கல பொலிசார்       இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.