சிரியா நாட்டில் இரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
சிரியாவின் இந்த தாக்குதலுக்கு அதிபர் பஷர் அல் ஆசாத் மிகப்பெரிய விலையை தரவேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துளார்.
இந்நிலையில், சிரியா நாட்டில் இரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சிரியா அரசு நடத்திய இரசாயன தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், போலந்து, நெதர்லாந்து, குவைத், பெரு மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.