மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் முதலாவது நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று(09) நிறைவு பெற்றது.

குறித்த நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 912 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக அமைந்த 98 ஆயிரம் இடங்கள் இனங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் பிரஷிலோ சமரவீர தெரிவித்துள்ளார்.