அமைச்சர் ஹரீனை பதவி விலகக் கோரிக்கை.. – அழுத்தம் பிரயோகிப்பின் கட்சியில் இருந்தும் விலகத் தயார்…

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவினால் கூறப்பட்டு வருகின்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நெருங்கிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தலதா அதுகோரளவுக்கு மீண்டும் குறித்த அமைச்சுப் பதவியினை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கோரிக்கையினை எதிர்த்து தனக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பின் அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமன்றி கட்சியில் இருந்தும் விலகத் தயார் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

####