ஹபரனை – மொரஸ்கஹவேவ பிரதேசத்தில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சாரதியின் நித்திரை காரணமாக குறித்த விபத்து இன்று(11) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
பொலன்னறுவ தொடக்கம் கல்முனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.