இலங்கை கலால் திணைக்களம், புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் விசேட கண்காணிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
மதுபானம் சார்ந்த குற்றங்களை கட்டுப்படுத்தி, மதுபான விற்பனை அனுமதி பெற்ற இடங்களில் நிகழும் மோசடிகளை நிறுத்துவது இத் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு இடத்திலும் மதுபானம் சார்ந்த குற்றங்களோ, ஊழல் மோசடிகளோ நிகழுமாயின் அதுபற்றி 0112 045 077 என்ற தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக அல்லது 0112 877 882 பெக்ஸ் இலக்கத்ததின் ஊடாக அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.