ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசில் இருந்து விலகல்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(11) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ‘இன்று(11) [அதாவது நேற்று] நள்ளிரவிற்கு பின்னர் தேசிய அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளில் இருந்து தாம் விலகவுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

தேசிய அரசில் இருந்து விலகிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்..

தயாசிறி ஜயசேகர, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாபா, எஸ்.பீ.திசாநாயக்க, சந்திம வீரக்கொடி , திலங்க சுமதிபால, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சுதர்ஷனி ப்ரனாந்துபுள்ளே, டி.பீ.ஏகநாயக்க, சுமேதா ஜீ ஜயசேன, தாரானாத் பஸ்நாயக, சுசந்த புஞ்சி நிலமே, அனுராத ஜயரத்ன, லக்ஷ்மன் வசந்த

 

Rishma