நேற்றிரவு பெய்த கடும் மழைக்கு 12 பேர் உயிரிழப்பு…

ராஜஸ்தானில் நேற்றிரவு(11) பெய்த கடும் மழையில் இரண்டு மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு(11) திடீரென இடி மின்னலுடன் கடும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் மழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா – தோல்பூர் இடையிலான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.