டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் பிதம்புரா அருகே உள்ள கோஹட் என்கிளேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது எட்டு வயதான மகன், மூன்று வயது மகள் என நான்கு பேரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.