இன்றும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல மாகாணங்களில் இன்று(14) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல், சபரகமுவ, தென் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி தொடக்கம் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரை கடற் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.