சப்ரகமுவ பல்கலையின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்…

எதிர்வரும் 23ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பீட மாணவர்களும் 22ஆம் திகதி தத்தமது விடுதிகளுக்கு சமுகமளிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பானது 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

####