கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மருத்துவ பீடத்தின் சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கல்வி பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பீடங்களினதும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.
அவர்களுக்கான தங்கு விடுதிகள் 22 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்