புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிடத்தக்க வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 93 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளது.
கடந்த வருடம் புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை 85 மில்லியன் ரூபா வருமானம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.