கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் யார் வில்லன் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்படம் பல்கேரியா, துருக்கி, அபுதாபி, இஸ்தான்புல், ஜார்ஜியா என பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் மோதும் வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கவுதம் மேனன். ஆனால், தற்போது யார் வில்லன் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு கையாளாக நடித்த விநாயகன் தான், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
விநாயகன் மலையாளத்தில் ‘களி’, ‘கம்மட்டி பாடம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனுஷின் ‘மரியான்’ படத்திலும் விநாயகன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
