ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாட கட்சியின் அரசியல் பீடம் இன்று(19) பிற்பகல் 3.30 அளவில் அலரி மாளிகையில் கூடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும்,
குறித்த கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானங்கள் எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற உள்ள கட்சியின் மே தினக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அரசியல் பீடத்தில் 10 பேர் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Rizmira