அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்…

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், அனைத்து பாடசாலை சுற்றுப்புறங்களையும் துப்பரவு செய்யுமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் பகுதிகள் துப்பரவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பருவ கால மழையின் காரணமாக டெங்கு நுளம்பு பெரும் அபாயம் இருப்பதினால் இதனை எதிர்கொள்வதற்காக கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள வெசாக் வாரத்திற்கு அமைவாக பாடசாலைகளில் வெசாக் வாரத்தை முன்னெடுப்பதிலும் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த வார காலப்பகுதியில் பல நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது என்று அமைச்சின் மதம் தொடர்பான கல்வி பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.என்.நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.