மே 01 ஆம் திகதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுகளுக்கான விலை அதிகரிக்கும் வாய்ப்பு…

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சூத்திரத்தின்படி பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை உயரும் சாத்தியம் அதிகம் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(22) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரவித்த அவர்;

“முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள 3 வருட உடன்படிக்கையின் படி இலங்கைக்கு 03வது கட்ட உதவி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கப் பெறவுள்ளது. இந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் உடன்படிக்கையில் செய்து கொள்ளப்பட்ட அம்சங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இதன் ஓர் அங்கமாகவே, எரிபொருளுக்கான சூத்திரம் அறிமுகம் செய்யப்படுகின்றது. புதிதாக வரிகள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தில் மக்களை அறிவுறுத்தவுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

 

௪$$