பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலுக்கு…

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற சமூக கலாசார கண்காட்சியில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. புத்தக விநியோகத்தில் தரம் 10,11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

####