எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படை வீரரான லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் எவன்கார்ட் கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(26) காலி நீதவான் நீதமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.