தேங்காய் எண்ணெயில் எப்படி விதவிதமாக லிப் பாம் தயாரிக்கலாம்?

தேங்காய் எண்ணெய் , உதட்டிற்கு நல்ல பலன் தரும். இதனை பயன்படுத்தி லிப் பாம் செய்யலாம். இந்த எண்ணெயில் இயற்கையாக இருக்கும் மாய்ச்சரைசிங் தன்மை மற்றும் குணப்படுத்தும் தன்மை, ஒரு கச்சிதமான லிப் பாமாக செயல்பட உதவுகிறது . மேலும் இதனை நேரடியாக உதட்டில் பயன்படுத்தலாம். அல்லது மற்ற பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் லிப் பாம்:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி

செய்முறை: மைக்ரோவேவ் அல்லது பேன் பயன்படுத்தி பெட்ரோலியம் ஜெல்லியை சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி 20-30 நிமிடங்கள் பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கொக்கோ பட்டர் லிப் பாம்:
தேவையான பொருட்கள் :
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் கொக்கோ பட்டர் (துருவியது)

செய்முறை: கொக்கோ பட்டரை பேனில் போட்டு சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி அரை மணி நேரம் பிரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய்- ஜோஜோபா எண்ணெய் லிப் பாம் :
தேவையான பொருட்கள் :
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 5 துளிகள்
ஜோஜோபா எண்ணெய்

செய்முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய்யை சூடாக்கி உருக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி அரை மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை லிப் பாம் :
தேவையான பொருட்கள் :
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1/2 ஸ்பூன் கர்நாபா மெழுகு
1 ஸ்பூன் கற்றாழை ஜெல்

செய்முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் கர்நாபா மெழுகை இளம் சூட்டில் உருக்கிக் கொள்ளவும். இந்த கலவையை ஆற விடுங்கள். இதனுடன் கற்றாழை ஜெல்லை கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் லிப் பாம்:
தேவையான பொருட்கள் :
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் கார்நாபா மெழுகு
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை: தேங்காய் எண்ணெய், கர்நாபா மெழுகு மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒரு பேனில் ஊற்றவும். இளம் சூட்டில் இவற்றை ஒன்றாகக் கலந்து உருக்கிக் கொள்ளவும். பிறகு இதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

நன்மைகள்:
தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாயச்ச்சரைசெர் . உதட்டில் இருக்கும் ஈரப்பதத்தை லாக் செய்து, உதட்டை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கிறது. இந்த எண்ணெய் உதட்டின் மேலே ஒரு படலத்தை உருவாக்கி, உதடுகளில் உள்ள நீர் வெளியேறி வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய், அழற்சியைக் குறைத்து, சருமத்திற்கு மிருதுவான தோற்றத்தைத் தருகிறது. தேங்காய் எண்ணெய் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சரும சேதம் சரி செய்யப்பட்டு, வறண்ட உதடுகள் பொலிவாகின்றன .

தேங்காய் எண்ணெயால் செய்ய முடியாத சரும சிகிச்சைகள் இல்லை என்ற அளவிற்கு பல நன்மைகளை செய்கின்றன.