எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் நடைபெறவுள்ள 04 அணிகள் மோதும் சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 24 வீரர்கள் பங்கேற்கும் விதத்தில் பட்டியல் பெயரிட தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த மாகாண அணிகளது முகாமைத்துவத்தினால் இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வீரர்களுள் 15 வீரர்கள் இறுதிப் பட்டியலுக்கு தெரிவு செய்யப்படுவர்.
மேலும், குறித்த போட்டிகளில் தம்புள்ள அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 2018 ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றுவதால் அவர் குறித்த போட்டிகளில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ள வீரர்கள் வருமாறு;
கொழும்பு – தினேஷ் சந்திமால்(தலைவர்), திசர பெரேரா(உப தலைவர்), தனஞ்சய சில்வா, ஷெஹான் ஜயசூரிய, லஹிறு திரிமன்ன, ஏஞ்சலோ பெரேரா, தில்ஹான் குரே, சாமர சில்வா, டில்ஷான் முனைவீர, லசித் அபேரத்ன, சமயத் துஷாந்த, நிசல் பென்சிச்கோ, வனிந்து ஹசரங்க, திக்ஷில டி சில்வா, கவிஷ்க அஞ்சுல, லக்ஷான் சந்தகன், ஸசிந்த பீரிஸ், லசித் அம்புல்தெனிய, விக்கும் சங்ஜய, விஷ்வா பெர்னாண்டோ, டுஷ்மந்த ஷமீர, நிபுன் மாலிங்க, கமிந்து மென்டிஸ், சரித் சேனநாயக்க (முகாமையாளர்), அவிஷ்க குணவர்த்தன(பயிற்ச்சியாளர்)
காலி – உபுல் தரங்க(தலைவர்), தசுன் ஷானக(உப தலைவர்), பானுக ராஜபக்ஷ, சதீர சமரவிக்கிரம, லஹிறு மலிந்த, ஜனித் லியனகே, சதுரங்க டி சில்வா, ரமித ரம்புக்வெல்ல, மாதவ வர்ணபூர, என்டி சொலமன்ஸ், தேஷான் டயஸ், இராஷ் சமரசூரிய, ஷெஹான் பெர்னாண்டோ, ஷம்மு அஷான், சீக்குகே பிரசன்ன, சதுர ரந்துனு, மலிந்த புஷ்பகுமார, நிஷான் பீரிஸ், சுரங்க லக்மால், நிசல தாரக, முஹம்மத் தில்ஷாத், தனஞ்சய லக்ஷான், அஷேன் பண்டார, வருண வராகொடா(முகாமையாளர்), ஹஷான் திலகரத்ன( பயிற்சியாளர்)
கண்டி – ஏஞ்சலோ மேத்யூஸ்(தலைவர்), நிரோஷன் திக்வெல்ல(உப தலைவர்), தனுஷ்க குணதிலக, அசேல குணரத்ன, சாமர கபுகெதர, மினோத் பானுக, மஹேல உடவத்த, அவிஷ்க பெர்னாண்டோ, தரங்க பரணவிதான, ப்ரியமால் பெரேரா,பெதும் நிஷ்ஷங்க, ஜீவன் மென்டிஸ், சவித்ரா பதிரன, அதீஷ நாணயக்கார, ரமேஷ் மென்டிஸ், பிரமோத் மதுஷான், சரித் அஷான்லங்கா, இசுறு உதான, நிபுன் காரியவசம், கசுன் ராஜித, லஹிறு குமார, பிரபாத் ஜெயசூரிய, ஹசித போயகொட, ஜெஹான் டேனியல், மலிந்த வர்ணபூர(முகாமையாளர்), பியல் விஜேதுங்க(பயிற்சியாளர்)
தம்புள்ள – குசல் ஜனித் பெரேரா(தலைவர்), மிலிந்த சிறிவர்த்தன(உப தலைவர்), லசித் மாலிங்க, குசல் மென்டிஸ், திமுத் கருணாரத்ன, அமில அபோன்சு, சவித்ர சேரசிங்க, சவித்ரா சேரசிங்க, சவித்ரா சேனாநாயக, அஷான் ப்ரியஞ்சன, லஹிறு கமகே, நிபுன் கருணாநாயக, சங்கீத் குரே, டீ.என்.சம்பத், லஹிறு மதுஷங்க, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வெண்டர்சே, ஷெஹான் மதுசங்க, ரவீந்து குணசேகர, கோசல கோசல குலசேகர, சஹான் நாணயக்கார, மகேஷ் பிரியதர்ஷன, டி.ஏ. ரத்நாயக்க, நிஷான் மதுஷங்க, திசறு ரஷ்மிக தில்ஷான், வினோதன் ஜோன்(முகாமையாளர்), சுமித்ரா வர்ணகுலசூரிய(பயிற்சியாளர்)
போட்டி அட்டவணை;
மே 02 – கொழும்பு மற்றும் தம்புள்ள (ஆர்.பிரேமதாச மைதானம்), கண்டி மற்றும் காலி (பீ.சரா)
மே 05 – கொழும்பு மற்றும் கண்டி (ஆர்.பிரேமதாச மைதானம்), தம்புள்ள மற்றும் காலி (சீ.சீ.சீ.)
மே 08 – கொழும்பு மற்றும் காலி (ஆர்.பிரேமதாச மைதானம்), தம்புள்ள மற்றும் கண்டி (பீ.சரா)
மே 11 – காலி மற்றும் கண்டி (பீ.சரா), தம்புள்ள மற்றும் கொழும்பு (சீ.சீ.சீ.)
மே 14 – காலி மற்றும் தம்புள்ள (பீ.சரா), கண்டி மற்றும் கொழும்பு (ஆர்.பிரேமதாச மைதானம்)
மே 17 – මහනුවර සහ දඹුල්ල (பீ.சரா), காலி மற்றும் கொழும்பு (ஆர்.பிரேமதாச மைதானம்)
மே 20- இறுதிப் போட்டி (பகலிரவாக..)
#Rishma