கம்பஹா நகரில் 10 வர்த்தக நிலையங்களில் இருந்து தரமற்ற பௌத்த கொடிகளை அகற்ற நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெசாக் நோன்மதி தின காலப்பகுதியில் தரமற்ற பௌத்த கொடிகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.