ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது..

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கலில் ஏற்பட்ட குழப்பநிலையினை தொடர்ந்து இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தேர்தலுக்கான புதிய திகதி ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

rishma