பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நூற்றுக்கு 10% உடனடி பேரூந்து கட்டண அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியமாக உள்ளதெனவும், ரூபாயின் வீழ்ச்சி காரணமாக பேரூந்து துறையை முன்னெடுப்பதில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பேரூந்து இறக்குமதி மற்றும் மேலதிக பகுதி கொள்வனவு விலைகள் அதிகரிக்கும் என்பதனால் பேரூந்து தொழில் துறைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ரூபாய் வீழ்ச்சிக்கு மத்தியில் பேரூந்து இறக்குமதியின் போது செலவிடப்படும் பணம் 02 லட்சம் ரூபாயை விடவும் அதிகம் எனவும், அதற்கமைய ஜுலை மாதம் முதலாம் திகதி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியம் எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
###