AI Beauty 2.0 சிறந்த தொழில்நுட்பத்துடன் OPPO F7 அறிமுகம்…

Selfie Expert மற்றும Leader ஆன OPPO தனது புதிய F7 கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த இந்த புதிய Selfie Expert தொலைபேசிஇ Artificial Intelligence (AI) இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுடப்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. F7 இல் காணப்படும் மேம்படுத்தப்படட் AI தொழில்நுட்பத்தினூடாக Selfie புகைப்படங்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல AI வலுவூட்டப்பட்ட செயற்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன. முழுத்திரை அம்சத்துடன், மேம்படுத்தப்பட்ட பல்தரப்பட்ட செயற்பாட்டு மென்பொருள் ஊடாக F7 இனால் நுகர்வோருக்கு சிறந்த பாவனையாளர் அனுபவம் வழங்கப்படுகிறது. 54,990 ரூபாய் எனும் விலையில் காணப்படும். OPPO F7, 64GB உடன்4GB RAM கொண்டுள்ளது.

நாடு முழுவதிலும் ஏப்ரல் 25ஆம் திகதி முதல் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும். Solar Red, Moonlight Silver மற்றும் Diamond Black ஆகிய மூன்று வர்ணங்களில் இவை காணப்படும். OPPO விரைவில் சந்தையில் F7 128GB மற்றும் 6GB அம்சங்களைக் கொண்ட தெரிவை Solar Red மற்றும் Diamond Black ஆகிய வர்ணங்களில் 69,990 எனும் விலையில் அறிமுகம் செய்யும் OPPO அறிமுக நிகழ்வில் தனது சர்வதேச விஸ்தரிப்பு திட்டத்தினையும் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளில் பிரவேசிக்க
OPPO திட்டமிட்டுள்ளது.

OPPO ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில்; “OPPO F7 மாதிரி Selfie புகைப்பட உள்ளம்சங்கள் மற்றும் இதர மேம்படுத்தல்களுடன் Artificial Intelligence தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் High Dynamic Range(HDR) உடனான 25MP கமரா போன்றன, OPPO குடும்பத்தின் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இளம் வாடிக்கையாளர்களின் முதல் தெரிவாகவும் அமைந்துள்ளது. உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றை நாடுவோருக்கு சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்திருந்தார்.