நாளை(04) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு , வடமேற்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் மத்;திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(03) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.