இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி மற்றும் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று(03) இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.