அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திய குறித்த நபர் உடனடியாக பொலிஸில் சரணடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், இருவரும் சுமார் 22 வயது மதிக்கத்தவர்கள் எனவும், இரு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.