காதலரை கைப்பிடிக்கும் சோனம் கபூர் – கோலாகலமாக தொடங்கிய திருமண கொண்டாட்டம்… (photos)

நடிகை சோனம் கபூரின் திருமண கொண்டாட்டம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர் இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவில் (தமிழில் அம்பிகாபதி) அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அகுஜா என்பரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக சோனம் கபூரின் குடும்பத்தினர் ஆனந்த் அகுஜாவுடன் அவருக்கு வருகிற 8ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று சோனம் கபூருக்கு மெகந்தி கொண்டாட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மும்பை பாந்திரா-குர்லா வளாகத்தில் நடைபெறுகிறது.

மாலையில் சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அகுஜா குடும்பத்தினர் பங்கேற்கும் விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இதற்காக நேற்றில் இருந்தே மும்பை ஜூகுவில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் நடிகர்கள் அர்ஜூன் கபூர், மோகித் மார்வா, குஷி கபூர், ஜான்வி கபூர் மற்றும் திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர் உள்பட இந்தி திரையுலகினர் பலர் குவியத்தொடங்கினர்.

இதேவேளை, பாந்திரா-குர்லா வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Image result for sonam kapoor mehandi

Image result for sonam kapoor mehandi

Image result for sonam kapoor mehandi