நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலைவேளையில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரப்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில பகுதிகளில் குறிப்பாக மேற்கு, மத்திய , சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.