அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.