ஜப்பானில் இடம் பெறவுள்ள IT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வாரத்தில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சி கூடமொன்றை அமைப்பதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கையிலுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப 10 நிறுவனங்கள் தமது மென்பொருள் தயாரிப்பு உபகரணங்களை தாம் காட்சிப்படுத்தவும், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவை தொடர்பாகவும் இங்கு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பான் டொக்கியோவில் நடைபெறவுள்ள IT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் சர்வதேச ரீதியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் முன்னிலையிலுள்ள பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
இலங்கை வருடந்தோறும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையின் மூலம் மேற்கொண்டு வரும் ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றது.
கடந்த வருடம் ஏற்றுமதி மூலமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதுடன், இந்த துறையின் மூலம் 200 லட்சம் பேருக்கு நேரடி தொழில் வாய்ப்பு வழங்க எதிர்பார்த்துள்ளது.