சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டப்படி பணிபகிஷ்கரிப்பை இன்று(08) நள்ளிரவு முதல் முன்னெடுப்பதற்கு புகையிரத தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.
புகோயிரத இயந்திர சாரதிகள் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளன.
கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரை தீர்வினை வழங்காமை காரணமாக இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.