பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, ஒரு விழாவில் அணிந்து வந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியாக உடை அணிவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முன் அழகை வெளிச்சம் போட்டுக்காட்டும் விதத்தில் இவர் அணியும் ஆடைகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவுக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. முன் அழகை முழுவதையும் காட்டும் விதமாக அரைகுறை ஆடை அணிந்து வந்திருந்தார். மறைக்க வேண்டிய பகுதிகள் வெட்டப்பட்டு கிழிசல் போல அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த ரசிகர்கள் ஆடையை சீக்கிரம் தரும் படி தையல்காரரை அவசரப்படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்று விமர்சனம் செய்துள்ளனர். இணைய தளங்களில் அந்த உடையை வைத்து கேலி சித்திரங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர். ‘மீம்ஸ்’ போட்டு கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
காற்றோட்டம் தேவை என்றால் அதற்கு இப்படியா? வீட்டில் சுதந்திரமாக இருக்கலாமே? என்று விதம் விதமாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
இது போல், ஏற்கனவே பலமுறை பரியங்கா சோப்ரா ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். என்றாலும், அவர் அதை கண்டு கொள்வது இல்லை.

