நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்…

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் 67 மேலதிக வாக்குகளால், நேற்று(09) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

நீதித்துறைத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(09) நடைபெற்றது.

இதையடுத்து குறித்த இந்த திருத்தச் சட்ட மூலத்திற்கு, ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இவ்வாக்கெடுப்பில், ஜே.வி.பியினர் கலந்து கொள்ளாததுடன், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

####